Home இலங்கை அரசியல் அரச வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

அரச வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

0

அரச துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் பத்தாயிரம் தற்காலிக ஊழியர்களை நிரந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வாயில் காப்பாளர்களின் கொடுப்பனவு ஏழாயிரம் ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் 

இதேவேளை சாலை மேம்பாட்டு ஆணையத்தில் எழுநூறு பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் முந்நூறு பேர் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

அவர்கள் பணி உறுதி செய்யப்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version