Home உலகம் அணு சோதனை தடையை மீண்டும் உறுதிப்படுத்திய ரஷ்யா

அணு சோதனை தடையை மீண்டும் உறுதிப்படுத்திய ரஷ்யா

0

அணு ஆயுத சோதனை தடைக்கான தனது உறுதிப்பாட்டை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கின்றது.

ஆயுத சோதனை 

அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை மற்றும் சோதனை நடத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடினும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா உறுதி பூண்டுள்ளது.

இடைநிறுத்தம் 

மூன்று தசாப்த கால இடைநிறுத்தத்தை அமெரிக்கா மீறினால், அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.

அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், இன்றைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அணுசக்தி சமநிலை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version