குறை கூறாமல் முன்னர் கூறியது போன்று வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு அதிகாரம்
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, இவ்வளவு காலத்திற்கு வற் வரியை குறைக்க முடியாது. பெட்ரோல் விலையை குறைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் அதிகாரம் இல்லை என்று கூறினார்கள்.
ஆனால் தற்போது, குறை சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
குறை கூறாமல் முன்னர் கூறியது போன்று வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.