Home இலங்கை அரசியல் அரசியல் ரீதியான பழிவாங்கல்களை நிறுத்த வேண்டும் – சாமர சம்பத்

அரசியல் ரீதியான பழிவாங்கல்களை நிறுத்த வேண்டும் – சாமர சம்பத்

0

அரசியல் ரீதியான பழிவாங்கல்களை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத்திற்கு, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

பழி வாங்கும் நடவடிக்கை

ஊழல் மோசடி தவிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமக்கு இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் தம்மை பழி வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

  

ஒரே குற்றச்சாட்டுக்கு மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு பிணை கிடைக்கும் என்ற காரணத்தினால் புதிய வழக்குத் தொடர்ந்து, தடுப்புக் காவலில் வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான முறைப்பாடு துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனவும் இதேவிதமாக நாட்டின் ஏனைய வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version