அரசாங்க வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்துவது, உரிய நபர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் பயன்படுத்துவது குறித்த கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போதைக்கு அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவுடன் தேசிய மக்கள் சக்தியின் முன்னைய நிலைப்பாடு முற்றாக மாற்றமடைந்துள்ளது.
சுற்றுநிருபம்
அதன் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவும், அவர்களின் மனைவி, பிள்ளைகள் பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உத்தியோகபூர்வ சாரதிகள் இல்லாத நேரங்களிலும் குறித்த வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
