எதிர்வரும் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு தற்போது வௌியாகியுள்ளது.
அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளனர்.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களை மாத்திரம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிலைப்பாட்டில் மாற்றம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மாத்திரம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.