Home இலங்கை அரசியல் யாழில் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆளுநர் கோரிக்கை

யாழில் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆளுநர் கோரிக்கை

0

யாழ். மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12/07/2024) நடைபெற்ற யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்து போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளணிப் பற்றாக்குறை

அத்துடன், ஏனைய பல திணைக்களங்களில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

NO COMMENTS

Exit mobile version