கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள வடமாகான சுதேச மருத்துவ
திணைக்களத்தின் ஆயுள்வேத, மூலிகை பண்ணை மற்றும் கிராமிய சித்த மருத்துவமனை
ஆகியவற்றை வடக்கு மாகாண ஆளுநர் சென்று பார்வையிட்டு அவற்றின் தேவைப்பாடுகள்
தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
இயங்காத நிலையில்..
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர்
நாகலிங்கம் வேதநாயகன் இன்று (19.07.2025) பிற்பகல் 1.30 மணி அளவில் கல்மடு நகர்
பகுதியில் அமைந்துள்ள வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மூலிகை பண்ணை
மற்றும் கல்மடு நகர் சித்த மருத்துவமனை ஆகியவற்றை சென்று பார்வையிட்டு அதன்
தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
தொடர்ந்து கல்மடுக்குளம் மற்றும் யுத்த காலத்தில் சேதமடைந்து இன்று வரை
இயங்காத நிலையில் உள்ள பாரிய அரிசி ஆலையினையும் சென்று பார்வையிட்டு அதனை
மீள இயக்குவது தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்
கிளிநொச்சி – இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் கைலாசபிள்ளை பிரகாஷ் கண்டவளை
பிரதேச செயலாளர். த பிருதாகரன் மற்றும் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
