Home இலங்கை அரசியல் புதிய அரசாங்கத்தினால் பணம் அச்சிடப்பட்டதாக பரவும் செய்தி போலியானது: விஜித ஹேரத்

புதிய அரசாங்கத்தினால் பணம் அச்சிடப்பட்டதாக பரவும் செய்தி போலியானது: விஜித ஹேரத்

0

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக போலியான செய்திகள் வெளிவருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ கடன் பெறவில்லை.

 போலியான செய்தி

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, (Anura Kumara Dissanayake ) நிதியமைச்சராக கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள் வெளியிடப்படவில்லை.

எனவே ஒரு பில்லியன் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி போலியானது” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version