Home இலங்கை சமூகம் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை நீக்க அரசாங்கம் தீர்மானம்

தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை நீக்க அரசாங்கம் தீர்மானம்

0

இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை மாற்றி புதிய நபரொருவரை அப்பதவியில் நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை தொடருந்து திணைக்களத்தின் தற்போதைய பொதுமுகாமையாளர் ஜயசுந்தர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் கடந்த டிசம்பர் மாதம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

பதவிக்கு நியமிப்பது தொடர்பில்

எனினும் தொடருந்து திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சரிவர கையாள முடியாத நிலையில் அவர் இருப்பதன் காரணமாக ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதன் பின்னர் புதியவர் ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version