அரச ஊழியர்களின் மீதமுள்ள சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
வலுவான அரசுத்துறை
அத்துடன், அடிப்படை சம்பள உயர்வின் முதல் கட்டம் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவூட்டியுள்ளார்.
“நாட்டை முன்னேற்றுவதற்கு வலுவான அரசுத்துறை தேவை. உலகின் அனைத்து முன்னேற்றமான நாடுகளுக்கும் வலுவான அரசுத்துறை இருந்துள்ளது.
அதுபோல நாமும் ஒரு வலுவான அரசுத்துறையை உருவாக்குவோம்,” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
