இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி வருகையின் போது திறக்கப்ட்ட குறித்த இடத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு மேற்படி விடயத்தை ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இந்த வசதி செயல்படும் நிலையில் இல்லாவிட்டாலும், அதன் திறப்பு விழாவை அறிவித்ததன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடு
முந்தைய அரசாங்கத்தின் பெயர் பலகையை நீக்கிவிட்டு வேறொன்றை நிறுவுவதைத் தவிர, அந்த இடத்தில் உண்மையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டம், கடந்த 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார சீர்திருத்த அமைச்சராக ஹர்ஷ டி சில்வா இருந்த காலத்தில், அழுகக்கூடிய பொருட்களுக்கான குளிர்பதன சேமிப்பு வசதியாக குறித்த திட்டம் முதன்முதலில் 2019 இல் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/JTzTbXMfFqo
