Home இலங்கை அரசியல் ராஜதந்திர காரணங்களை கூறுவதற்கும் அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை: திலித் ஜெயவீர

ராஜதந்திர காரணங்களை கூறுவதற்கும் அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை: திலித் ஜெயவீர

0

இந்தியாவுடன், அண்மையில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, சர்வஜன பலய கூட்டணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர,அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

அவிசாவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏழு ஒப்பந்தம்

அரசாங்கம் எந்த
சூழ்நிலையிலும் ஒப்பந்தத்தை வெளியிடாது என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியப்
பிரதமர் மோடியுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில்
ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

இருப்பினும், அவற்றின் உண்மையான உள்ளடக்கம் குறித்து எந்த தகவலையும் வழங்கத்
தவறிவிட்டார்.

தேசிய மக்கள் சக்தி 

அதற்கு பதிலாக, விபரங்களைத் தேடுபவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தநிலையில், அரசாங்கம் இப்போது உண்மையிலேயே வருந்தத்தக்க நிலைப்பாட்டை
எட்டியுள்ளது என்றும், முந்தைய எந்த நிர்வாகமும் இந்த வழியில் செயல்படவில்லை
என்றும் திலித் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ராஜதந்திர காரணங்களுக்காக வெளியிட
முடியாவிட்டால், அரசாங்கம் அதை ஒப்புக்கொள்ள குறைந்தபட்சம் முதுகெலும்பைக்
கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version