Home இலங்கை அரசியல் ஆடம்பர வாகனங்களைக் கோரும் அதிகாரிகள்

ஆடம்பர வாகனங்களைக் கோரும் அதிகாரிகள்

0

தற்பொழுது பயன்படுத்தி வரும் ஆடம்பர சொகுசு வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு சில அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வேறும் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை வழங்க முடியாது என்ற காரணத்தினால் இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இடமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அதற்காக அரசாங்கம் மேலதிக பணத்தை செலவிட நேரிடும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து இதுவரையில் பதில் எதுவும் வழங்கப்படவில்லை. 

NO COMMENTS

Exit mobile version