Home முக்கியச் செய்திகள் கடத்தல்காரர்களின் கூடாரமாகும் இலங்கை …! அரசிடம் வந்த கோரிக்கை

கடத்தல்காரர்களின் கூடாரமாகும் இலங்கை …! அரசிடம் வந்த கோரிக்கை

0

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம்

இதேவேளை, டி – சிண்டிகேட் என்றும் அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட், தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.  

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால கருத்து தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version