Home இலங்கை கல்வி முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு

0

முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – அடித்து கொலை செய்யப்பட்ட மாணவன்

 கட்டுமான துறைகளில் வேலை வாய்ப்பு

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போர் வீரர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னாள் படைவீரர்களுக்கும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்குவது குறித்து அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தலைமையில் தெளிவுபடுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முதல் கட்டமாக இஸ்ரேலில் கட்டுமான துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

67 பேர் இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஓய்வு பெற்றுக்கொண்ட 44 வயதுக்கும் குறைந்த படையினருக்கு பயிற்சி வழங்கி பரீட்சை நடாத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார வாகன இறக்குமதிக்கு முதலிடம் : மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version