Home இலங்கை கல்வி மாணவர்களின் குடும்பத் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம்

மாணவர்களின் குடும்பத் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம்

0

Courtesy: Sivaa Mayuri

மாணவர்களின் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான தகவல் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

குறைந்த வருமானம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/govt-to-collect-family-data-of-students-1732088297

NO COMMENTS

Exit mobile version