Home இலங்கை அரசியல் இந்த அரசாங்கத்தின் மீது இடி விழும் – நிர்மால் தெவ்சிறி

இந்த அரசாங்கத்தின் மீது இடி விழும் – நிர்மால் தெவ்சிறி

0

கல்வித்துறைசார் மறுசீரமைப்புக்களை  தற்பொழுது பரிந்துரைக்கப்பட்ட அடிப்படையில் மேற்கொண்டால் இந்த அரசாங்கத்தின் மீது இடி விழும் என பேராசிரியர் நிர்மால் தெவ்சிறி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ள கல்வி மறுசீரமைப்பு பரிந்துரைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் குடியியற் கல்வி என்பனவற்றை கட்டாயமற்றதாக அறிவிக்கும் திட்டமொன்றை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் எதனால் எடுக்கப்பட்டது எனவும் சமயம் மட்டும் ஏன் கட்டாய பாடங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து பகிரங்க விவாதமொன்றை நடத்துவதற்காக பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு அழைப்பு விடுப்பதாக பேராசிரியர் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மறுசீரமைப்புக்கள் சித்த சுயாதீனத்துடன் முன்மொழியப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி வரலாற்றுக் கற்கை பேராசியர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version