Home இலங்கை கல்வி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வாட்ஸ்அப் ஊடாக வெளியானதாக குற்றச்சாட்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வாட்ஸ்அப் ஊடாக வெளியானதாக குற்றச்சாட்டு

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வாட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் உட்பட ஆறு ஆசிரியர்களை பரீட்சை திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

அநுராதபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து குறித்த வினாத்தாள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியில் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறித்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப் ஊடக அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (15) ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை வினாத்தாளை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து பல ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளமை கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இது தெரடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வினாத்தாள் அனுராதபுரம், நொச்சியாகம, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில், பரீட்சைகள் மீதான நம்பிக்கை உடைந்துவிட்டதாகவும், ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமைக்கு காரணமான அனைவருக்கும் அதிகாரிகள் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

NO COMMENTS

Exit mobile version