Home இலங்கை கல்வி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா! பிரதமர் விளக்கம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா! பிரதமர் விளக்கம்

0

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மிகவும் அழுத்தம் மிக்கது என்ற காரணத்தினால் அந்த அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை

எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் மிகவும் அதிக அழுத்தமற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு நிலைமையினால் புலமைப் பரிசில் பரீட்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு இடையில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாடங்கள் ரத்து

இலங்கையில் வரலாறு பாடம் கற்பிக்கப்படும் முறைமையில் தமக்கு உடன்பாடு கிடையாது என பிரதமர் கூறியுள்ளார்.

மாணவர்கள் விரும்பிக் கற்கும் வகையில் வரலாறு பாடம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, வரலாறு பாடம் மற்றும் அழகியல் பாடங்கள் ரத்து செய்யப்படாது என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலைமைகளையும் அவதானிக்க முடிவதாகத் தெரிவித்தள்ளார்.
பாடசாலை நேரத்தை அரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version