புதிய இணைப்பு
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையானது இன்றையதினம் நாடளாவிய ரீதியில் காலை
9.00 மணியளவில் ஆரம்பமாகியது.
அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய
பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை ஆரம்பமாகியது.
இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க
முடிந்தது.
முதலாம் இணைப்பு
ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை)
நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது.
அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு
செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய
பாடசாலைக்கு மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை
காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு காவல்துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-centers-in-jaffna-1754799902
