Home இலங்கை கல்வி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து யாழ். அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து யாழ். அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

0

நாடாளவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15.09.2024)
காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, குறித்த பரீட்சையானது யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.

இடையூறு  

எனவே, பரீட்சை நடைபெறவுள்ள நேரங்களில்
மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அவர் பரீட்சை நிலையங்களுக்கு
அண்மையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-in-jaffna-1726354488

NO COMMENTS

Exit mobile version