Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் ஏற்கனவே கசிந்ததாகவும், எனவே குறித்த பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நான்கு அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் இன்று (17) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.

எதிர்தரப்பு சட்டத்தரணிகள்

யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இதனடிப்படையில், இன்று (17) மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை நிறைவு செய்திருந்தனர்.

இதையடுத்து, நாளை (18) எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், ஏதேனும் சமரசம் காணப்படுமாயின் நாளை (18) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version