Home இலங்கை கல்வி புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி 

விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி கடந்த புதன்கிழமை 64 மையங்களில் ஆரம்பமானது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் 244,092 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 79,787 மாணவர்கள் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version