Home இலங்கை சமூகம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான கருத்து தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான கருத்து தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு

0

இனிவரும் காலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (scholarship exam) நடத்தப்பட மாட்டாது என வெளியான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் தரப்பிலும் வெவ்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அந்த வகையில், குறித்த விடயம் தொடர்பில், லங்காசிறி ஊடகம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் போது, இப்பரீட்சை நடத்தப்படுவது அவசியம் என சிலரும் மாணவர்களின் நலனுக்காக பரீட்சை நிறுத்தப்படுவதே சிறப்பு என சிலரும் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, இந்த புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதாக அமைந்தாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக சில பெற்றோர்கள் கூறியுள்ளனர். 

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையானது தரம் 5இல் அவசியமற்ற ஒன்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தாளுடன் முன்னோடி பரீட்சைத்தாள் பகிரப்பட்டதால் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், இது தொடர்பில் பொதுமக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version