Home இலங்கை கல்வி தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

0

பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (05.06.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில வருடங்களுக்கு முன்னர் 330,000ஆக இருந்த இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது குறைந்துள்ளது.

பாடசாலை விலகல்

இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை குறையும்.

இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.

ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/grade-one-students-in-sri-lanka-1717581245

NO COMMENTS

Exit mobile version