Home உலகம் வரிகளை உயர்த்தும் கென்ய அரசாங்கம்: நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

வரிகளை உயர்த்தும் கென்ய அரசாங்கம்: நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

0

வரிகளை உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கோரி, கென்யாவில் (Kenya) நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள், அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.

கென்யா நாட்டில் வரி உயர்த்துவதற்கான செயல் திட்டம் அடங்கிய நிதி சட்டமூலமானது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தெருக்களில் இறங்கி நேற்று (25) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரோயகம்

குறித்த போரட்டமானது தீவிரமடைந்த நிலையில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் 10 நபர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்கா (Africa) நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.வெளிநாட்டு கடனும் உச்சத்தில் காணப்படுகின்றமையையடுத்து, வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ (William Rudo) தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு

ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசும் அறிவித்தது.

அவற்றில் உணவு பொருட்களில் ஒன்றான பானுக்கான வரியும் அடங்கும். கென்யா நாட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டு பொருளாதாரம் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது.

வேலை வாய்ப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலை ஆகியவற்றால் இளைஞர்கள் உட்பட நாட்டு மக்களுக்கு வாழ்வதே கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version