Home உலகம் தணிந்து வரும் லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ

தணிந்து வரும் லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீ

0

அமெரிக்காவில் (United States) லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாகாணத்தில் உள்ல லாஸ் ஏஞ்சல்சில் கடந்த ஏழாம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது.

ஒன்பது நாட்களுக்கும் மேலாக தீ எரிவதால் இதுவரை மொத்தம் 40,000 இற்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது.

அதிகமான கட்டமைப்புகள்

அத்தோடு, 12,000 இற்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளதுடன் காட்டுத் தீயில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உலங்கு வானூர்தி வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்தோடு, தீ தொடர்ந்து பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ அணைக்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version