இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கிவிற்கும் (Anura Kumara Dissanayake) சீன தூதுவருக்கும் (Qi Zhenhong) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திபானது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான பதிவு, ஜனாதிபதி அநுரவின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதியின் வாழ்த்து
அதன் போது, புதிய ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டமைக்கு சீன அரசாங்கத்தின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், சீன ஜனாதிபதியின் விசேட வாழ்த்துச் செய்தியையும் கையளித்ததாக அநுர குமார தெரிவித்துள்ளார்.
On Sunday (22), I met the Ambassador of the People’s Republic of China at the JVP Headquarters. The Ambassador conveyed the good wishes of the Chinese Government on my being elected as the new President and handed me a special congratulatory message from the Chinese President. pic.twitter.com/TP7dnNkeFp
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 23, 2024