இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசானாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திசானாயக்கவின் வெற்றி தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில்,
“இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்று உங்கள் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியில், மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் நெருங்கிய அண்டை நாடுகளாக இருக்கின்றோம்.
Heartfelt congratulations to President-elect Anura Kumara Dissanayake (@anuradisanayake) on your remarkable election victory today. As close neighbours, I am eager to work with you to further strengthen the historic friendship between the Maldives and Sri Lanka. Wishing you…
— Dr Mohamed Muizzu (@MMuizzu) September 22, 2024
மகத்தான வெற்றி
உங்கள் புதிய பாத்திரத்தில் நீங்கள் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கியுள்ள அநுரகுமார,
Thank you, Prime Minister @CMShehbaz for your kind wishes. My wish is also to see that the close ties our two nations already enjoy are fostered further for our mutual benefit and that of the region. https://t.co/iOEWheibRR
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 23, 2024
உங்கள் அன்பான விருப்பங்களுக்கும், நமது இரு நாடுகளும் ஏற்கனவே அனுபவித்து வரும் நெருங்கிய உறவுகள் நமது பரஸ்பர நலனுக்காகவும், பிராந்தியத்தின் நலனுக்காகவும் நட்புறவை மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என தெரிவித்துள்ளார்.