Home இலங்கை சமூகம் நெல்லுக்கான உத்தரவாத விலை: விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

நெல்லுக்கான உத்தரவாத விலை: விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

0

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டம் மற்றும் 2024 யால சிறுபோகத்திற்கான உத்தரவாத விலைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலைகளை ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த ஆண்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உத்தரவாத விலைகள் 

இதன்படி,

  1. நாட்டரிசி நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 102
  2. சம்பா நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 105

  3. கீரிசம்பா நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 112

அத்தோடு, விவசாயிகளை ஆதரிப்பதையும் நியாயமான சந்தை நிலைமைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் நெல் கொள்முதலுக்கான உத்தரவாத விலைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன்படி,

  1. நாட்டரிசி நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 120

  2. சம்பா நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 125
  3. கீரி சம்பா நெல் – ஒரு கிலோகிராமுக்கு ரூபாய் 132

 

NO COMMENTS

Exit mobile version