மாத்தளை – வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இரவு வேளையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி காணாமல்போய் ஒரு மாதத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு காணாமல் போன குறித்த துப்பாக்கி நுககொல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக பகுதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கி
அந்த பகுதியில் துப்பாக்கியை கண்ட பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஹசலக பொலிஸாரின் உத்தியோகபூர்வ நாயான ‘ரோக்கின்’ உதவியுடன், துப்பாக்கியை சுற்றியுள்ள பகுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இந்த துப்பாக்கி வில்கமுவ பொலிஸாரின் காணாமல் போன துப்பாக்கி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |