Home இலங்கை குற்றம் மட்டக்களப்பு வவுணதீவில் துப்பாக்கிசூடு! ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வவுணதீவில் துப்பாக்கிசூடு! ஒருவர் படுகாயம்

0

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இடம்பெற்ற
துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று(2) பகல் இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய
நிலையில் அது துப்பாக்கிச்சூடாக மாறியுள்ளது.

துப்பாக்கிசூடு

கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இடம்பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில்
பா.சதீஸ்குமார் என்னும் 36வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

நீர் விநியோகம் தொடர்பாக இருவரிடையே ஏற்பட்ட மோதலின்போது வீட்டில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிசூடு
நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். 

NO COMMENTS

Exit mobile version