Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு

0

கட்டுநாயக்க (Katunayake) – ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 29 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

https://www.youtube.com/embed/o7I7p2I5PTc

NO COMMENTS

Exit mobile version