Home முக்கியச் செய்திகள் தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

0

காலியில் (Galle) உள்ள உணவகம் ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் சற்றுமுன்னர் காலி -மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மீட்டியாகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மீட்டியாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version