ஒவ்வொரு போரிலும் கை, கால், தலை என உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் முகத்தில் துப்பாக்கி ரவையைச் சுமந்து செல்கின்றார் இந்த முன்னாள் போராளி.
மண்ணின் விடுதலைக்காக போராடியவர் இன்று தனது குடும்பத்தை கொண்டு நடத்துவதிலும் பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதற்கு முடியாத நிலைலும் இருக்கின்றார்.
உடலில் ஏற்பட்ட காயங்களால் மயங்கி விழுந்தால் அதில் இருந்து மீள்வதற்கு மூன்று நான்கு நாட்களாகும் நிலையில் கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதுடன் கூலி வேலைக்கும் செல்கின்றார் அவருடைய மனைவி.
பெரிதளவில் எந்த உதவியையும் எதிர்பார்க்காத இந்தக் குடும்பம் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான உதவியை வழங்குமாறு கேட்கின்றனர்.
இவ்வாறாக முன்னாள் போராளியின் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் எதிர்கொள்ளும் அவலங்களை எடுத்துக் காட்டுகின்றது இந்தக் காணொளி …..
https://www.youtube.com/embed/TzxONd7Xl1U
Source: https://ibctamil.com/article/gun-shot-in-the-face-pain-of-ex-combatant-life-1726296550
