திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு
துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் , தெரிவு செய்யப்பட்ட 27
பயனாளிகளுக்கு வாயு துப்பாக்கிகள் மானிய அடிப்படையில் வழங்கி
வைக்கப்பட்டது.
பயிற்சி
அத்தோடு துப்பாக்கி இயக்குவதற்கான செயன்முறை பயிற்சியும் வழங்கி
வைக்கப்பட்டன.
தென்னைத் தோட்டங்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்குமே நோக்கில் இவ்
வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தென்னை பயிற்சிக்கு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர்
,பண்ணை திட்டமிடல் உத்தியோகத்தர் ,தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்
,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.