யாழ். இளைஞர்கள் அனைவரும் குடு பாவிப்பவர்கள் என்று கூறியதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையின்போது அர்ச்சனாவுக்கு ஆதரவு வழங்கியவருமான ஞானப்பிரகாசம் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய ஒரு காணொளியில் யாழ். இளைஞர்கள்
அனைவரும் குடு போதைப்பொருளை பாவிப்பதாகவும் தன்னால் மது அருந்தாமல்
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது எனவும் அர்ச்சுனா கூறியுள்ளார்.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் எத்தனை சதவீதமான இளைஞர்கள் போதைப்பொருள் பாவிக்கின்றார்கள்
என்ற தரவுகள் அவரிடம் உள்ளதா? எழுந்தமானதிற்கு அழுத மானத்திற்கு பேசுவதே அவரது
தொடர்ச்சியான செயற்பாடாக காணப்படுகிறது.
அண்மையில் ஜெனீவா செல்லும்போது தான் பல மாதங்கள் செலவழித்து ஆதாரங்களை திரட்டி
ஜெனிவாவிற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பாகவே
அவர் ஆதாரங்களை திரட்டி அங்கு செல்வதாக நாங்களும் நினைத்தோம். ஆனால் அவர் தன்
மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும், தனக்கு பாதுகாப்பு
வழங்கப்படவில்லை என்றும் ஆதாரங்களை திரட்டி ஜெனிவாவில் சமர்ப்பித்துள்ளார்.
தொடர்ச்சியாக ஜெனிவாவிற்கு செல்கின்ற எமது மக்கள் பிரதிநிதிகள் தமிழ்
மக்களுக்கு நீதி வேண்டி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களையே
ஜெனிவாவில் சமர்ப்பித்து வந்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது சுயநலவங்களுக்காக புலம்பெயர் தேசத்து
மக்களது நிதியை பயன்படுத்தி ஜெனிவாவிக்கு சென்றது வெட்ககேடான விடயம்.
அதை தொடர்ந்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
https://www.youtube.com/embed/Tfs_qa2mDWQ
