Home இலங்கை அரசியல் ஹக்கீம் கூறும் குருக்கள்மட புதைகுழி: இரகசியம் உடைக்கும் சிறீதரன்

ஹக்கீம் கூறும் குருக்கள்மட புதைகுழி: இரகசியம் உடைக்கும் சிறீதரன்

0

குருக்கள்மட புதைகுழி அகழ்வு செய்யப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

தொண்ணூறாம் ஆண்டுகளில் இருந்து பல்வேறு அமைச்சரவை அந்தஸ்துகளை பெற்ற ஹக்கீம், அப்போதெல்லாம் இது தொடர்பில் எந்த கருத்தையும் கூறவில்லை.

இந்நிலையில், தற்போது இந்த கருத்தை கூறினால் செம்மணி விவகாரத்தை குழப்பலாம் என்ற நிகழ்ச்சி நிரலை யாரோ ஒருவர் ஹக்கீமுக்கு வழங்கியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ரவூப் ஹக்கீம் 6 தடவைகள் கிளிநொச்சியில் சந்திருந்ததாக தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

இதன்போது, ஹக்கீம், தனது பிரத்தியேக சமையல்காரரை அழைத்து வரவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு நல்லெண்ணங்களையும் விடுதலைப் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியதாக சிறீதரன் கூறினார். 

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version