Home இலங்கை குற்றம் சந்திரிக்காவின் வீட்டில் இரகசியமாக நுழைந்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு

சந்திரிக்காவின் வீட்டில் இரகசியமாக நுழைந்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு(Chandrika Kumaratunga) சொந்தமான
ஹொரகொல்ல வளவே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட ஒருவர் மீது
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள்
இருவரை துப்பாக்கிகளுடன் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வட்டுபிட்டியல வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றை நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 

NO COMMENTS

Exit mobile version