பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மெகா இசை நிகழ்ச்சி “OG சம்பவம்” சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி ஜூலை 12, 2025 அன்று (நாளை) லண்டனில் நடைபெற உள்ளது.
தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சி, அவரது வெற்றிப்படங்களின் இசையை நேரடி மேடையில் அனுபவிக்க ஒரு வாய்ப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல பிரபல பாடல்களின் நேரடி பாடல்கள், இசைக்குழுவின் கண்கவர் நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியவற்றும் உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி. பிரகாஷின் இசை பயணத்தில் இது ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கு ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/XrnyPCYpmAo
