இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி கொட்டுதல் ஆகும்.
இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உஷ்ணம், மரபு போன்ற பலவித காரணங்கள் உண்டு.
முடி வளர்ச்சியை அதிகரிக்க பல விடயங்களை இரசாயன ரீதியிலான சில விடயங்களை செய்யும் போது அது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
செய்முறை
தூய்மையான தேங்காய் எண்ணெய், வெந்தயம்,
கறிவேப்பிலை ஆகிய 3 பொருட்களும் முடி வளர்ச்சியில் இதிக செல்வாக்கு செலுத்தும்.
எனவே வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்து வந்ததும் அதில் அரைத்த வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து 2 மணி நேரத்திற்கு பின் ஷாம்பு போட்டு கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |