Home தொழில்நுட்பம் நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்

0

நாசாவின் (Nasa) விண்வெளி ஆய்வில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை உருவகப்படுத்திய ஒர் குடியிருப்பில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இலங்கையரான பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) என்ற விஞ்ஞான ஆய்வாளரும் நாசா ஆய்வில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான ஆய்வு

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த விஞ்ஞான ஆய்வில் ஜேசன் லீ, ஸ்டெப்னி நவாரோ, ஸாரீப் அல் ரோமாய்தி மற்றும் பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) ஆகிய நான்கு பேர் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்க உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தைப் போன்றதொரு கட்டமைப்பிற்குள் இவர்கள் 45 நாட்கள் விண்வெளி ஆய்வாளர்களைப் போன்றே தங்கியிருப்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.

பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய விசா திட்டம் – புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சித் தகவல்

45 நாட்கள் ஆய்வு 

தனிமைப்படுத்தல், தொலைதூரம், தனித்திருத்தல் உள்ளிட்ட விடயங்களை விண்வெளி வீராகள் எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

நிலா, செவ்வாய் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக அந்த சூழ்நிலைகளில் விண்வெளி வீரர்களின் நிலைமை குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக இவர்கள் செவ்வாயில் நடப்பது போன்றும் அங்கு வாழ்வதும் போன்றும் உணர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கதிர்வீச்சு குறித்த ஆய்வு விஞ்ஞானி

இலங்கையைச் சேர்ந்த விஜேசேகர கலாநிதி ஆய்வு விஞ்ஞானி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாசா ஆய்வு மையத்தின் கதிர்வீச்சு குறித்த ஆய்வாளராக கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுக்கொண்ட பியூமி விஜேசேகர, பிட்ஸ்பேர்க் கார்னிஜி மெலோன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார். 

கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version