Home இலங்கை சமூகம் தலைநகரில் புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகை

தலைநகரில் புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகை

0

புனித ஹஜ் பெருநாளை இன்று (17) திங்கட்கிழமை முஸ்லிம் மக்கள் கொண்டாடுகின்றனர்.

நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது.  

இறைவனின் தூதரான இப்றாகீம், நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கொழும்பு – மாளிகாவத்தை பீ.டி சிறிசேன மைதானத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளிலும், தொழுகையிலும் ஈடுப்பட்டு ஹஜ் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

 

Source: https://tamilwin.com/article/hajju-eid-prayer-in-colombo-1718595561

NO COMMENTS

Exit mobile version