Home உலகம் நேட்டோ அமைப்பின் புதிய செயலாளராக நெதர்லாந்து பிரதமர் நியமனம்!

நேட்டோ அமைப்பின் புதிய செயலாளராக நெதர்லாந்து பிரதமர் நியமனம்!

0

நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து(Netherlands) பிரதமர் மார்க் ரூட்டே(Mark Rutte) நியமிக்கப்பட்டுள்ளார்.

நேட்டோ அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். இது மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுவதுடன் இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ளவும் முடியும்.

இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும். 

பொது செயலாளர்

இந்த நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

உக்ரைனுக்கும்(Ukraine) ரஷ்யாவுக்கும்(Russia) இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.

தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நோர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஓகஸ்ட் 31ஆம் திகதி முடிவடைகிறது.அதனை தொடர்ந்து ஒக்டோபர் 1ஆம் திகதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.

ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version