Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு : ஹக்கீம் வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு : ஹக்கீம் வெளியிட்ட அறிவிப்பு

0

எதிர்வரும் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(Sri Lanka Muslim Congress) தெரிவித்துள்ளது.

தாம் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) தெரிவித்தார்.

கட்சி வேறு முடிவெடுத்தால்

எனினும் கட்சி வேறு முடிவெடுத்தால் அதுபற்றி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் ரணில் விக்ரமசிங்கவே (ranil wickremesinghe) வெற்றிபெறுவார் என அவரது பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வமாக அறிவிக்காத ரணில்

ஆனால் அவர் உத்தியோகபூர்வமாக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லை எனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version