Home இலங்கை அரசியல் ஆசிரியர்களுக்கு அரை நாள் விடுமுறை : பிரதமருக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்களுக்கு அரை நாள் விடுமுறை : பிரதமருக்கு பறந்த கோரிக்கை

0

ஹஜ்ஜூப் பெருநாளுக்காக ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரை நேற்று (03.06.2025) நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பான மனு ஒன்றையும் கையளித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும். வழமையாக வெள்ளிக்கிழமை மாலை வரை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் போதனை செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

தேவையான நடவடிக்கை

இதன்பின்னர் தூர இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர் பயிலுனர்களால் அவர்களது இருப்பிடங்களுக்குச் செல்வதில் இடர்பாடுகள் உள்ளன.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க ஏற்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை செவிமடுத்த பிரதமர் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version