Home இலங்கை அரசியல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் – திஸ்ஸ குட்டியாரச்சி

அரசாங்கம் பதவி விலக வேண்டும் – திஸ்ஸ குட்டியாரச்சி

0

தேசிய மக்கள் சக்தி அரசு பதவி விலகி, மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் தானும் அமைதியாக இருந்தபோதிலும், நாமல் ராஜபக்சவுடன் கிராம் கிராமமாக சென்று செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் எதிர்கால தலைவர் நாமல் ராஜபக்ச என தாம் நம்புவதாகவும், மகிந்த ராஜபக்சஅணியின் அடுத்த தலைமையாக அவருடன் இணைந்து பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

போலி குற்றச்சாட்டுக்கள்

2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடு பின்னடைவை சந்தித்ததாகவும், அவர்களை திருடர்கள் என போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசை வீழ்த்துவதற்கு முன்பு, அவர்கள் பதவி விலகல் செய்து, மீண்டும் பொது ஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வழிநடத்த சிறந்த அனுபவம் கொண்ட குழு தேவை எனவும் அதற்கு தாங்கள்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்கு தலைமை தாங்கவும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அரசியல் பழிவாங்கல்களை தடுக்க தம்மால் முடியும் எனவும் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version