Home இலங்கை சமூகம் எயிட்ஸை தடுக்க நடைபயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி

எயிட்ஸை தடுக்க நடைபயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி

0

தேசிய எயிட்ஸ் தின நிகழ்வு இன்று(01) கொழும்பு காலி மோதர பிட்டியில் நடைபெற்றது

டிசம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறும் இந்த நிகழ்வு பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya) மற்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘எய்ட்ஸ் சமீபத்திய உரிமைகளைப் பாதுகாத்தல்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதனுடன் நடைபயணம் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு ஆணுறை விநியோகம் மற்றும் அதுதொடர்பான பணிகள் நடந்தது.

 இலங்கையில் அண்மைய காலமாக எயிட்ஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக 15 தொடக்கம் 24 வயதினரிடையே இந்த தொற்று வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version