Home இலங்கை சமூகம் தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

0

 இளம் தாய் ஒருவர் அநுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இந்த நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தவர் ஆவார்.

இவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்துள்ளனர்.

பல வருடங்களாக குழந்தை பிறப்பதில் தாமதம்

பல வருடங்களாக குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த நான்கு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் அவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது கண்டறியப்பட்ட தருணத்தில் இருந்து சுகப்பிரசவத்திற்காக கடுமையாக உழைத்து வந்தனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முதற்தடவை

சத்திரசிகிச்சை மூலம் பிறந்த இக்குழந்தைகள், தற்போது குறைமாதப் பிரிவில் மிகவும் நன்றாக குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவித்தன.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக நான்கு குழந்தைகளின் பிறப்பு பதிவாகியுள்ளமையால் இதுவும் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் தாயெயாருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version